×
 

ஜனாதிபதிக்கே காலக்கெடு..! சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என். ரவிக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்த போது, பல்கலைக்கழக மானியக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார்.

இதில் முரண்பாடுகள் ஏற்பட்டதன் காரணமாக சட்டசபையில் பல்கலைக்கழகத் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இருந்து வந்தார். இதே போல் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இதையும் படிங்க: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..!

இதனை அடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேர்மையற்ற வகையில் செயல்பட்டதாகவும், முந்தைய தீர்ப்புகளை மதிக்காமல் அவமரியாதை செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. 

இந்த நிலையில் முதன் முறையாக குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு வழங்கி உள்ளது. ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாத காலத்திற்குள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி மூன்று மாத காலத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்காவிட்டால் மாநில அரசுகள் ரிட் மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கவர்னர் ஆர்.என்.ரவியிடம் நேர்மை இல்லை.. முழு தீர்ப்பையும் வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share