அசாமில் திடீர் நில அதிர்வு... ரிக்டர் அளவு கோலில் 5ஆக பதிவு..! அதிர்ச்சியில் மக்கள்..!
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான நிலநடுக்கமாக உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் மோரிகான் நகரை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாஹத்தி உள்ளிட்ட இடங்களை இந்த நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
இது ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலம் பூரி அருகில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்கத்தா ஆகிய இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது தற்போது, அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?