×
 

நாட்டையே உலுக்கி வரும் பூகம்பங்கள்..! இயற்கையின் எச்சரிக்கை மணியா? கதிகலங்கும் மக்கள்..!

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக மியான்மர் மற்றும் தாய்லாந்தை அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் புரட்டிப்போட்டன. அதிலும், மியான்மர் நாட்டு மக்களின் நிலை கவளைக்கிடத்தில் உள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண் இமைக்கும் நேரத்தில் சீட்டுக் கட்டுகள் போல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்த நிகழ்வுகள் காண்போரை பதைபதைக்க செய்தது. தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், வீடுகள் என எண்ணற்ற கட்டடங்கள் நில நடுக்கத்தால் உருக்குலைந்தன. குறிப்பாக தலைநகர் நேபிடா, மண்டலாய் உட்பட6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியதால் மக்கள் அச்சமடைந்தனர். 

இதையும் படிங்க: மியான்மருக்கான ‘ஆப்ரேஷன் பிரம்மா’ என்றால் என்ன..? இந்தியா ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது..?

இதேபோல் சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இம்பால், கொல்கத்தா ஆகிய நகரங்களில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக கூறப்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மியான்மர் மக்கள் இரவு நேரத்திலும் சாலைகளிலேயே தஞ்சம் அடைந்தனர். இப்படி நிலைகுலைந்து நிற்கும் மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள், மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு அட்ச ரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டதால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ‘334 அணு குண்டுகளின் சக்தி வெளிப்படும்’: மியான்மர் பூகம்பம் குறித்து புவியியல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share