ஈசிஆர் கார் மிரட்டல் சம்பவம்.. 6 பேர் கைது... போலீசார் கூறுவது உண்மையா?...
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் காரில் வந்த இளம்பெண்களை, மற்றொரு காரில் வந்தவர்கள் மிரட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை என அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அரங்கேறி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், சென்னை ஈசிஆர் என அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி நள்ளிரவு இளம்பெண்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திமுக கொடி போட்ட மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் சிலர் இந்த காரில் வந்த பெண்களை இடிப்பது போல் வந்துள்ளனர். மேலும் நடுவழியில் காரை நிறுத்தி இந்தக் காரை வழிமறித்து கண்ணாடி கதவை திறக்கச் சொல்லி அடிக்கப் பாய்ந்துள்ளனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திமுககாரன் என்றால் குற்றம் செய்வதற்கு அதிகாரபூர்வ அடையாளமா.? திமுக அரசை வெளுத்து வாங்கும் வானதி சீனிவாசன்!
திமுக கொடி கட்டிய கார் என்பதால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கத் தாமதமா என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இளம்பெண்கள் காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதால் தான் பின்னால் வந்த காரில் பயணித்தவர்கள் விரட்டிச் சென்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த காரைச் சேர்ந்தவர்களை கைது செய்யாமலேயே அவர்களின் தரப்பு விளக்கத்தை போலீசார் எப்படி கொடுத்தனர் என்ற புதிய கேள்வி பிறந்தது.
இந்நிலையில் 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திமுக கொடி போட்ட காரில் பயணித்த 6 இளைஞர்களை கைது செய்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள், தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர்கள் உண்மையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனரா? அல்லது திசைதிருப்பும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் சிந்தனை எழுகிறது.
இதையும் படிங்க: திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..!