#BREAKING குறி வச்சு அடிக்கும் ED..! மீண்டும் சென்னையில் 3 இடங்களில் ரெய்டு.! பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்..!
சென்னையில் உள்ள 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள 2 இடங்களிலும், வேப்பேரியில் உள்ள இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை வேப்பேரியில் இருக்கக்கூடிய பைனான்சியர் மோகன் குமார் என்பவரது வீட்டிலும், அசோக் நகரில் ஹரிஹண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!
இந்த சோதனையானது 2 நாட்களுக்கு நடைபெறும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறப்படது. பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் மோசடி நடந்திருக்கிறதா? சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன, எவ்வளவு கோடிக்கு மோசடி நடந்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், அதுதொடர்பான மதுபான ஆலைகளிலும் சோதனைகளில் ஈடுபட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
டாஸ்மாக் மற்றும் மதுபான ஆலைகளில் கைப்பற்றப்பட்ட கொள்முதல் கணக்கில் முறைகேடு இருப்பதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்த 2 நாட்களுக்கு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!