×
 

காலையில் ஜி.கே.வாசன் போட்ட ரூட்… மாலையில் அமித் ஷாவுடன் எடப்பாடியார் மீட்..! அனல் கிளப்பும் அரசியல்..!

மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக நிர்வாகிகளும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருக்கிறார். அவர் எதற்காக சென்று இருக்கிறார் என்பதை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் இருந்து ஒரே காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று டெல்லிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்களும் டெல்லி சென்று பாஜக தலைவர்களை கூட்டாக சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக-அதிமுக கூட்டணியின் முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இபிஎஸுக்கு அடுத்து இவரா?... அடுத்தடுத்து டெல்லி பறக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள் - காரணம் என்ன? 

டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அங்கிருக்கும் அதிமுக எம்.பி.,கள் தம்பிதுரை, சி.விசண்முகம் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். முன்னதாக இன்று காலை ஜி.கே.வாசன், அமித்ஷாவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சென்று சந்தித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.

அவர் அமித்ஷாவை சந்தித்திருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் டெல்லி சென்று இருப்பது மிக முக்கியமான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற  தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக -பாஜக கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக நிர்வாகிகளும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார்கள்.

ஆனால், ''டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன். பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை'' என டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். டெல்லி சாகேத் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டார். ஆனால், கடந்த மாதம் 10ம் தேதியே அதிமுகவில் டெல்லி அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. 
 

இதையும் படிங்க: #BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு... திடீரென டெல்லி பறந்த இபிஎஸ்... பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share