×
 

அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?

அதிமுக பிரிந்தது பிரிந்தது தான் ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதிமுக பிரிந்தது பிரிந்தது தான் ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை, அதிமுக தொண்டர்களின் உயிரினும் மேலான அதிமுக அலுவலகத்தை குண்டர்களை வைத்து உடைத்த நபர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதிமுக மற்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இறப்பிற்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் மரியாதை செலுத்திய பிறகு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் வரவேண்டிய நிதியை வரவேண்டும் என கோரிக்கை மனு அளித்திருப்பதாக கூறிய அவர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வழங்கக்கூடிய நிதி வழங்கப்படும் என்றார். ஏற்கனவே அண்ணா திமுக அண்ணா காலத்திலும் சரி எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கை  தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு அதே நிலை தொடர வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்து இருக்கிறோம் என்றார்.

கட்சியை ஒருங்கிணைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என ஓபிஎஸ் கூறியதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் பேசலாம். பிரிந்து கிடப்பது சேர்வதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்தது தான் ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்ல, கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைப்பது எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறினார்.

இன்று அண்ணா திமுக தலைமை  அலுவலகத்தில் ரவுடிகளை கூட்டி சென்று உடைத்து தலைமைக் கழக அலுவலகத்தை அண்ணா திமுக தொண்டன் உடைய உயிராக இருக்கக்கூடிய அலுவலகத்தை என்று உடைத்தார்களோ?,  அன்றே கட்சியில் அவருக்கு சேர தகுதி இல்லை. அவரை இணைத்துக்கொள்ள வாய்ப்பே கிடையாது என அடித்துக்கூறினார். 

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்தது பிரிந்ததுதான்.. இனி சேர்வதற்கு சாத்தியமே இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்..!

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வந்த பிறகு அண்ணாமலையும் டெல்லி சென்றிருக்கிறாரே என்ற கேள்விக்கு,  அதை அண்ணாமலை இடம்தான் கேட்க வேண்டும் என கூறினார். மீனவர்கள் இன்று நேற்று அல்ல தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள் அந்த மீனவர்களை காக்க வேண்டும், மீனவர்கள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது இருந்தே  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆகவே இலங்கை அரசு வேண்டும் என்ற திட்டமிட்டு நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவருடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது  அவரும் அவர்களை கைது செய்வது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது என்றார். 

இதையும் படிங்க: 2026இல் திமுக ஆட்சிக்கு முடிவுரை.. NDA ஆட்சிக்கு தொடக்கவுரை.. டிடிவி தினகரன் ஒரே போடு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share