×
 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. திமுக சார்பில்  வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலில் திமுக - நாதக என இரு முனைப் போட்டி நிலவியது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று (5-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனினும் மாலை 6 மணிக்கு மேலும் சில இடஙகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே வாக்குப்பதிவு சதவீதத்தில் சிறிது மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. முக்கிய கட்சிகள் போட்டியிடாததால், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுக எதிர்பார்க்கிறது. அதேபோல கடந்த தேர்தல்களைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்று நாதக நம்பிக்கையுடன் உள்ளது.- 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு என்பது அன்று தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: கள்ள ஓட்டு போட்டு சிக்கிய சீமான் தம்பிகள்... கண்ணீர் விட்டு கதறிய நாதக வேட்பாளர் சீதாலட்சுமி! 

இதையும் படிங்க: கள்ள ஓட்டு போட முயன்ற நாதகவினர்... கையும் களவுமாக பிடித்த திமுகவினர்... ஈரோடு கிழக்கில் பரபரப்பு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share