×
 

கணவர் மறைவால் கதறி அழுத கோகுல இந்திரா..! நேரில் சென்று ஆறுதல் கூறிய இபிஎஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திர சேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர சேகர் உயிரிழந்தார். சந்திர சேகர் மரணம் குறித்து அறிந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கோகுல இந்திராவின் வீட்டுக்கு சென்று சந்திர சேகரின் உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்திர சேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தாக எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாடிகனில் போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலம்! இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share