×
 

குழந்தை என்றும் பாராமல் தந்தை செய்த கொடூரம்.. பரபரப்பு வாக்குமூலம்!

ஈரோடு அருகே தன் ஜாடை இல்லாததால் பெற்ற குழந்தையை அடித்துக்கொண்டு கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குமார் - பாண்டிச்சேரி தம்பதியினருக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 15ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பாண்டிச்சேரி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தந்தை குமாரிடம் மகளை விட்டுச் சென்றுள்ளார்.

அன்று பிற்பகலே குமார் பாண்டிச்சேரி தொடர்பு கொண்டு மகள் திடீரென மயங்கி விட்டதாகவும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர்கள் ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாய் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு விரைந்து செல்லவே, மகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாண்டிச்செல்வி, மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக  மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!

 இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில், தந்தை குமாரின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார் அதிர்ச்சிகரமான தகவல்களை போலீஸிடம் தெரிவித்தார். அதில் இரட்டை குழந்தைகள் பிறந்தது முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்ததாகவும், குழந்தையை கணவர் ஜாடையில் இல்லை என குமார் ஆக்ரோஷமடைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் குழந்தை அழுததனால் ஆத்திரமடைந்து குமார் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் பார்க்க வேண்டும் என நினைத்து, சுவற்றில் குழந்தையின் தலையை தொடர்ந்து மோதியது குழந்தை இறந்து விட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் மனைவியிடம் இதனை மறைக்க பொய் சொல்லி வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். பெற்ற குழந்தையை முக ஜாடை இல்லை என தான் பெற்ற தந்தையே சுவற்றில் மோதி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலமாக கண்டடுப்பு.. நீடிக்கும் மர்மத்தை அவிழ்க்க முயலும் போலீசார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share