திடீரென பற்றி எரிந்த ஆம்னி.. துரித முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு
கோவை சித்தாபுதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சந்தோஷ் குமார், மேலும் மூவருடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு சின்னசாமி சாலையில் மீண்டும் அவினாசியை நோக்கி தனது ஆம்னி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது LPG யில் ஓட்டி வந்த வாகனத்தை பெட்ரோலுக்கு மாற்றிய போது வாகனத்திலிருந்து புகை வெளியேறி உள்ளது.உடனடியாக காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து நான்கு பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
சிறியரக தீயணைப்பு தடுப்பான்களை கொண்டு தீயை அணைக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: காரில் பற்றிய தீ.. ஓட்டுனரின் சுதாரிப்பால் தப்பிய 5 உயிர்கள்!
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் வாகனம் முழுவதும் இருந்து வெறும் கூடு மட்டும் எஞ்சியது.விபத்து தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காரில் பற்றிய தீ.. ஓட்டுனரின் சுதாரிப்பால் தப்பிய 5 உயிர்கள்!