×
 

பணியால் சுளப்பட்ட ஏற்காடு.. புகைப்படம் எடுத்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்..

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பணம் பனிப்பொழிவு நிலவு வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஏலகிரி தமிழகத்தில் பிரதான சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் வற்றி காட்சியளித்தது. இதனால் ஏற்காட்டிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றுத்துடனே வீடு திரும்பினர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், 5 அடி தூரத்தில் இருக்கும் பொருட்கள்கூட மறையும் அளவிற்கு பனிமூட்டம் படர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண் எம்.பி முதுகில் கை வைத்து கூப்பிட்ட ஆ.ராசா..! வைரலான போட்டோ..!

மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட வாரே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். முன்னதாக பனிமூட்டத்துடன் லேசான சாரல் மழையும் பெய்து வருவதனால், அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பொதுத்தேர்வு நேரம் என்பதனால் குறைந்த அளவில் வரும் சுற்றுலா பயணிகள் லேசான சாரலுடன் கூடிய பனிமூட்டத்தை கண்டு ரசித்து வருகின்றனர். ஏற்காடு படகு சவாரி செய்து கொண்டும், பூங்காக்களில் பனிமூட்டத்தையும் சாரல் மலையையும் கண்டு புகைப்படம் எடுத்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் "சார்களுக்கு" எதிராக சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்... தமிழகம் முழுக்க பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share