×
 

அப்போ பொன்முடி; இப்போ துரைமுருகன்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் திமுக அமைச்சர்கள்!!

பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பொன்முடி திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, விலைமாது தொடர்பாகவும், சைவம், வைணவம் ஆகியவை குறித்து பேசி இருக்கிறார். அதில், ஒரு விலைமாது வீட்டிற்கு போகிறான். அங்கு போகும் போது ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்.

சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன என்பதற்கு மிகவும் கொச்சையான விளக்கம் ஒன்றையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால்  திமுகவில் அமைச்சர் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் தான் கட்சிகள். மற்றவைகள் கட்சிகள் இல்லை. வரும் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைவார்கள்.

நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்து கொண்டு திமுகவை எதிர்க்க பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பாக அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 

இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு போட்டியாக ஒரு தலைவரும் கிடையாது.. விஜய்யை ரவுண்டு கட்டும் திமுக தலைவர்கள்.!!

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் மதங்களை வைத்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அமைச்சர் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகள் குறித்த தனது பேச்சிற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு மாற்றுத் திறனாளிகள் என்று பெயரிட்டு அழைத்தார்.

அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும்.

அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முடிஞ்சா அணை கட்டுங்க பார்க்கலாம்... ஆவேசமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share