முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள்.. வன்கொடுமை வழக்கில் இருந்து விடுதலை..!
பணிப்பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் டிஜிபி திலகவதியின் முன்னாள் மருமகள் சுருதி திலக்கை வழக்கில் இருந்து விடுதலை செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுருதி. இவருக்கும் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக்கிற்கும் 2007ஆம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மருத்துவரான பிரபு திலக் தன்னுடன் மருத்துவராகப் பணியாற்றிய இந்திரா பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், இதனை தட்டிக் கேட்டதால் பிரபு திலக் சுருதியை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராத் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..!
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது சுருதி திலக் தனது வீட்டில் வேலை செய்த பணிப் பெண் சபினா என்பவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.
புகாரின் அடிப்படையில் காவல்துறை கடந்த 2022ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை எனவே சுருதியை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: துணிக்கடைகளில் இனி கேரி பேக்கிற்கு பணம் வசூலித்தால் அபராதம்..!