ரூபாய் குறியீடு எப்படி வேணா இருக்கலாம்.. தமிழ் குறியீடுக்கு ப.சிதம்பரம் சப்போர்ட்டு.!
'இனிமேலாவது மத்திய அரசு வெட்கப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன்.”
ரூபாய் குறியீட்டை அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் '₹' என்கிற ரூபாயின் குறியீட்டுக்குப் பதிலாக 'ரூ' என்கிற தமிழ் குறியீட்டைப் பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கையை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதங்கள் சோஷியல் மீடியாவில் வலுத்துள்ளன. என்றாலும், இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும், ரூபாய் குறியீடு பற்றி கவலைப்படாமல் ரூபாய் மதிப்புப் பற்றி கவலைப்படுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “ரூபாய் குறியீடு அந்தந்த மொழி அடிப்படையில் குறிப்பிடப்படுவது வழக்கம். ஆவணங்களில் ரூபாயை ‘Rs’ என்றுதான் பயன்படுத்துகிறோம். இந்தி எழுத்தில் கோடிட்ட ‘₹’ என்கிற குறியீட்டைப் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். ரூபாய் குறியீட்டை எந்த வழியில் பயன்படுத்துவது என்பது பிரச்சினையே கிடையாது. அந்தக் குறியீட்டுக்கு பின்னர் குறிப்பிடப்படும் எண்களில்தான் மதிப்பே உள்ளது.” என்று சிதம்பரம் கூறினார்.
இதையும் படிங்க: ரூபாய் குறியீட்டை மாற்றிய விவகாரம்.. கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல்.. அடிச்சித் தூக்கும் ஸ்டாலின்.!
மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்ததை நான் வரவேற்கிறேன். இனிமேலாவது மத்திய அரசு வெட்கப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!