சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!
மதுரையில் கோடை காலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் - மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் - மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவல்துறையினர் கடும் வெயிலில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களது பணிச்சுமையை தவிர்க்கும் வகையிலும், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்., கோடை காலத்தை முன்னிட்டு மதுரை போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பத்தை குறைத்து காற்றோட்டமுள்ள மோர், தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து காவல் கண்காணிப்பு மையத்தில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் துவக்கி வைத்தார். தொடர்ந்து., போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி., கருப்பு கண்ணாடி ஆகியவற்றை வழங்கிய ஆணையர் காவலர்களுக்கு நீர் - மோர் பழச்சாறு வழங்கினார்.
இதையும் படிங்க: இனி லைன்-ல நிக்கவே வேண்டாம்... பட்ஜெட்டில் அமைச்சர் சொன்ன இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா?
இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா, கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என 100 கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை... தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்...!