கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு.. 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!
ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் அவதூறாக பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணிக்கு எதிரான சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.
இது தொடர்பாக இசைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆண்டு விழாவில் ஷாக் கொடுத்த மாணவர்கள்... உடனே பறந்த நோட்டீஸ்!!
எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அஸ்திவாரமே சனாதன தர்மம் தான்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அதிரடி..!