×
 

வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!

கிப்லி அனிமேஷன் புகைப்பட டிரெண்டிங்கில் அரசியல் பிரபலங்களும் இணைந்து இணையத்தை கலக்கி வருகின்றனர்.

சமீபத்திய நாட்களில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தாலே அனிமேஷன் வரையிலான புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் இருப்பதை பார்த்திருப்போம். அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட், கால்பந்து வீரர்கள், ஆகியோரில் தொடங்கி சாமானிய மக்கள் வரை இது போன்ற அனிமேஷன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

அனிமே என்று அழைக்கப்படும் மாதிரியான அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி அனிமேஷன் புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொளுத்தும் வெயில்.. பறவைகளுக்கு நீரும் உணவும் அளியுங்கள்.. முதல்வரின் கனிவான வேண்டுகோள்..!

மிகவும் ட்ரெண்டிங்காக போய்க்கொண்டிருக்கும் இந்த கிப்ளியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இணைந்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை தனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விவசாய நிலத்தில் கையில் நாற்றுகள் வைத்து விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம், மருத்துவர்கள் உடன் நிற்கும் புகைப்படம், நீர்த்தேக்கங்களை பார்வையிடுவது, மக்கள் அன்புடன் வரவேற்கும் புகைப்படம் உள்ளிட்டவற்றை கிப்ளி அனிமேஷனில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். 

இவரைப்போலவே, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மறைத்த தனது தந்தை வசந்தகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை கிப்ளி் அனிமேஷனில் உருவாக்கி தனது ஞாபகங்களை பகிர்த்துள்ளார். அது மட்டும் அல்லாமல் தனது மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அனிமேஷன் செய்து instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் ஜனசேனா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கிப்லி அனிமேஷன் புகைப்படங்களை பதிவேற்றி, நினைவுச் சின்னத் தருணங்கள் மற்றும் அவரது எழுச்சி ஊட்டும் பயணத்தின் சாரத்தை பிரதிபலிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதே போல், பிரதமர் மோடி உள்ளிட்டோர் படங்களையும் சிலர் அனிமேஷன் செய்த சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த ட்ரெண்டிங் அனிமேஷன் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல்.. வீடியோ காலில் கொலை மிரட்டல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share