பிளாக் மெயில் செய்த காதலன்...! உல்லாசத்தின் போது கதையை முடித்த காதலி.! பகீர் ரிப்போர்ட்
உத்திரபிரதேச மாநிலத்தில் பிளாக் மெயில் செய்த காதலனை உல்லாசத்தின் போது காதலி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நேரங்களில், நாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத வகையில் சில குற்றங்கள் அரங்கேறி விடுகின்றன. அதுபோன்ற ஒரு விபரீத சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலத்தின் பெய்ரேலி பகுதி கிராமத்து சேர்ந்த 32 வயது பெண். அதே ஊரைச் சேர்ந்த முகமது இக்பால் (வயது 35) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் இருந்திருக்கிறது. நட்பாக பழகிய அந்த பெண்ணை ஒரு கட்டத்தில் பலவந்தப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை "பிளாக்மெயில்" செய்து அடிக்கடி உறவு வைத்துக் கொண்டார். முகமது இக்பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து அவர்கள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில், குழந்தையுடன் வெளியூர் சென்று திரும்பிய அவர் மனைவி, படுக்கையில் கணவர் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போஜ்புரா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருந்த தனது கணவர் திடீரென இறந்த கிடப்பது சந்தேகமாக இருக்கிறது என்று அந்த புகாரில் குறிப்பிட்ட அவர், கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இக்பாலின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் யாரோ அவரை மூச்சு திணறடித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தங்களுடைய பாணியில் விசாரணையை தொடங்கினார்கள்.
இதையும் படிங்க: த்ரிஷா-விஜய்-கீர்த்தி சுரேஷ் = TVK...! பகீர் கிளப்பும் காமாட்சி நாயுடு!
அப்போதுதான் அதே ஊரைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருடன் இக்பாலுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண் எம்பிராய்டரி வேலை செய்து வந்திருக்கிறார். கொலை நடந்த நாள் அன்று இக்பால் இந்த பெண்ணுடன் ஆறு முறை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருப்பதாகவும் உடனே வீட்டுக்கு வரும்படியும் அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
அழைப்பை ஏற்று அந்தப் பெண்ணும் உடனே வீட்டுக்கு வந்துவிட்டானர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது, ஏற்கனவே தான் திட்டமிட்டு வைத்திருந்தபடி, சமயம் பார்த்து கட்டி அணைப்பது போல் நடித்து கழுத்தை நெரித்து இக்பாலை கொலை செய்ததாக, விசாரணையை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் யாதவ் இடம் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
தொடக்கத்தில் நட்புரீதியாக தான் அவர்கள் இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். எம்பிராய்டரி வேலைக்காக துணிமணிகளை இக்பால் அவருக்கு கொடுத்து வந்ததை தொடர்ந்து, அவர்கள் உறவில் மாற்றம் ஏற்பட்டது. 'மிஸ்ட் கால்' கொடுத்து அவர்கள் மணி கணக்கில் போனில் பேசத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து அடிக்கடிஇருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் இந்த உறவு எல்லை மீறி சென்றது. இக்பால் " நமக்குள் இருக்கும் உறவை வெளியே சொல்லி விடுவேன்" என அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி அழைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பெண் 15 நாட்களுக்கு முன்பாகவே அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ம.பி.யில் தந்தையின் இறுதிச் சடங்கை யார் செய்வது என்பதில் போட்டி போட்டி.. பாதி உடலைக் கேட்ட அண்ணன்.. பீதியாகி நின்ற தம்பி..!