ஆந்தை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி.. வினோத உயிரினம் குறித்து வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
திருவாரூர் அருகே ஆந்தை கண்ணுடன் பிறந்த விநோத ஆட்டுக் குட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் தேவூர் பகுதியை சேர்ந்த கருணாகரன்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருணாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், கவிதா வீட்டில் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வளர்த்து வரும் ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டு குட்டியானது வழக்கமாக ஆடு ஈனும் குட்டியைப் போல அல்லாமல், மிகவும் சிறியதாக ஆந்தையைப் போலவே இருந்துள்ளது. மேலும் அந்த ஆட்டுக்குட்டியின் கண்கள் மற்றும் முக அமைப்பு ஆந்தையைப் போலவே இருந்துள்ளது.
மேலும் இரண்டு கண்களுக்கும் ஒரே இமையும், ஆட்டுக்குட்டியின் நாக்கு மேல்நோக்கியும் இருந்துள்ளது. இதையடுத்து வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டியை கால்நடை மருத்துவர்கள் இடம் சென்று பார்க்கலாம் என அக்கம் பக்கத்தினரின் அறிவுரையை கேட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..!
அப்போது ஆட்டுக்குட்டியை பரிசோதித்த மருத்துவர் வினோதமாக பிறந்துள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் கவிதாவின் ஆடு ஈன்ற விநோத ஆட்டுக்குட்டியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சீட்டுக்கட்டாய் சரிந்த 10,000 கட்டிடங்கள்.. மியான்மரில் இருந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!