×
 

மீண்டும் எகிறிய தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!

ஐந்து நாட்களாக சற்று குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை 70 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. இதனால் நடுத்தர மக்கள் கலக்கத்திற்கு ஆளாகினர். சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் ஊர் சூழல் உள்ளிட்டத்தையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. 

இது மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரி விதிப்பு முறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையாள முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக பங்குச்சந்தை வெறும் சரிவை சந்தித்துள்ளது. 9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது. 

இதையும் படிங்க: என்னை மிரட்டுறாங்க சார்... நீதிபதி முன் கதறி அழுத நடிகை.. தங்க கடத்தலில் சிக்கும் அரசியல்வாதிகள்.?

எனவே பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டதால் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைக்கும் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது. உலகளவில் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்பதால் அனைவரும் போட்டி போட்டு கொண்டு தங்கத்தில் முதலீடு செய்வதே விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இருப்பினும் கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை சற்று சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மேலும் 520 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. 

நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் 2,680 ரூபாய் தங்கம் விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு..! முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share