×
 

அரசு பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை... தமிழ்நாடு அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...! 

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 274 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அதிகபட்சமாக கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் பணிடங்களும், சென்னை மண்டலத்தில் 364 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலி பணியிடங்களும், நெல்லையில் 362 பணியிடங்களும், கோவை மண்டலத்தில் 344 பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 322 பணியிடங்களும், விழுப்புரம் மண்டலத்தில் 322 நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ் தெரியலனா அரசு வேலைய இழக்கணும்..? பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share