ஆளுநர் உரையை உதறித் தள்ளிவிட்டு... சட்டப்பேரவையை விட்டு வேக, வேகமாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையைப் படிக்காமல் அவையை விட்டு வெளியேறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையைப் படிக்காமல் அவையை விட்டு வெளியேறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதனால் தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. கடந்த 2 ஆண்டுகளாகவே ஆளுநரின் உரை சர்ச்சையில் முடிந்த நிலையில் இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பேரவையில் ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆவலுடன் காத்திருந்தனர்.
வழக்கம் போல் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வருகை தந்தார். அவருக்கு பேரவை வாசலில் காத்திருந்த காவலர்கள் உரிய மரியாதை வழங்கி அவைக்குள் அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது தான் மரபு, இதற்கான உரை ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் ஆளுநர் உரையை வாசித்து அவையை தொடங்கி வைப்பார் என அனைவரும் காத்திருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வேக, வேகமாக அவையை விட்டு வெளியேறினார். அவை தொடங்கியதுமே தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘யார் அந்த சார்?’ சட்டை; சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செய்த தரமான சம்பவம்!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் வாசிக்கப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழக சட்டப்பேரவையில் 1969ம் ஆண்டு முதலே தமிழ் தாய் வாழ்த்துடன் அவை நடவடிக்கைகளை தொடங்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் நாளே அதகளமாகப்போகும் சட்டப்பேரவை; அவையை அதிரவைக்கப் போகும் அதிமுக!