×
 

முதல்வருக்கு போட்டியாக துணை வேந்தர்கள் மாநாடு.. ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம்..!

துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தும் அதிகாரம் ஆளுனருக்கு இருப்பதாக ஆளுனர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் உதகையில் அனைத்து துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. கடந்த 16ஆம் தேதி தான் துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதற்கு போட்டியாக ஆளுநர் இந்த மாநாட்டை நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி..! துணை ஜனாதிபதியுடன் ஆளுநர் ரவி சந்திப்பு..!

 இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், இந்த மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் நடத்துவது தான் என்றும் கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ரவி தலைமையில் இந்த மாநாடு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மத்திய அரசு, மாநில அரசு தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள் அல்லாத இடங்களில் பதிவாளர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தி இருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சிறப்பு அழைப்பாளர் அழைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தான் சிறப்பு அழைப்பாளராக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை அழைத்துள்ளதாகவும், அவர் இந்த மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தான் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், துணைவேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்..! பிரதமரை சந்திக்க திட்டம்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share