கருவிலே பாலினத்தை கண்டறிந்த விவகாரம்.. அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்..
சேலம் அருகே கருவின்பால் இனத்தை கண்டறிந்த விவகாரத்தில் அரசு டாக்டர் மற்றும் நர்ஸ் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் விரும்பப்படுவதால் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால், எருக்கம் பால், சுனையுள்ள நெல்லை தொண்டைக் குழியில் திணித்துக் கொன்ற காலம் இருந்து வந்தது. விருப்பத்தை விட பெண் குழந்தைகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகம் என்பதால் பெரும்பாலும் பெண் குழந்தைகளை தட்டி கழித்தே வந்தனர். அந்த காலங்களில் நிகழ்த்தியது, தற்போது வரை பின்பற்றப்படுகிறது.
ஆனால் பெண் சிசுக்கொலை முற்றிலும் தடுக்கப்பட்டது என விகிதம் விகிதாச்சாரங்கள் வெளிப்படுத்தினாலும், நவீன முறையில் சிசுவின் பாலினம் கண்டறியப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று நவீன ஸ்கேன் மூலம் பார்த்து கலைத்துவிடுகின்றனர். இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சட்ட திட்ட நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளன. ஆனாலும் அவ்வப்போது சிசுக்கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் சேலம் வீராணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பசுபதி ஸ்கேன் சென்டர்-ல் விதிகளை மீறி கருவின் பாலினத்தை கண்டறிந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் அம்பலமானது.
இதையும் படிங்க: சொந்த பேத்தியிடமே சில்மிஷம் செய்த தாத்தா.. பள்ளி தலைமை ஆசிரியரால் வெளிவந்த உண்மை..!
இதனை அடுத்து குழந்தை பாலினத்தை கண் தெரிவிக்க ரூபாய் 15,000 வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து புகாரின் பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசு டாக்டர் முத்தமிழ் நர்ஸ் உட்பட ஒன்பது பேரை சுகாதாரத் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இது மட்டும் இன்றி அப்பகுதியில் வேறேனும் ஸ்கேன் சென்டரில் பாலினம் கண்டுபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மோசமான நிர்வாகத்தை மறைக்க முடியாதுங்க’... மு.க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!