கழுகின் கால்களில் ஜிபிஎஸ்...அலறிய பண்ருட்டி வாசிகள்
பண்ருட்டி கிராமப் பகுதியில் வட்டமடித்து பறந்த கழுகின் கால்களில் ஜிபிஎஸ் போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பண்ருட்டி கிராமப் பகுதியில் வட்டமடித்து பறந்த கழுகின் கால்களில் ஜிபிஎஸ் போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடி கிராமத்தில் கழுகு ஒன்று வட்டமடித்து பறந்தது .அதை பார்த்த கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள் . காரணம் கழுகின் கால் மற்றும் முதுகு பகுதியில் ஜிபிஎஸ் போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது . இதைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் கழுகை பிடிக்க முற்பட்டனர் ஆனால் கைகளில் சிக்க வில்லை
கழுகு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோ புதுப்பேட்டை காவல் நிலைய போலீசார் கண்ணிலும் பட்டது. உடனடியாக கிராமத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழுகை பிடிக்க முற்பட்டனர் ஆனால் அவர்களாலும் கழுகை பிடிக்க முடியவில்லை . இதனை தொடர்ந்து வனத்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டபின்னர் கழுகு எங்கிருந்து வந்தது ? யார் அனுப்பினார்கள்? அதில் உள்ளது கேமராவா அல்லது ஜிபிஎஸ் கருவியா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்
இதையும் படிங்க: யானை தந்தத்தில் விநாயகர் சிலை..வாலிபரை தட்டித்தூக்கிய வனத்துறை..!
இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்