×
 

ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை...

ஜிஎஸ்டி மாதாந்திர, காலாண்டு ரிட்டன் தாக்கல் செய்ய இன்று கடைசிநாளில் அதன் சர்வரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ரிட்டன் தாக்கல் செய்ய முடியாமல் வரிசெலுத்துவோர் அவதியில் உள்ளனர்.

ஜிஎஸ்டி சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வரிசெலுத்துவோர் என்ன செய்வெதன்று தெரியாமல் கையை பிசைகிறார்கள். ஜிஎஸ்டி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு எப்போது சரி செய்யப்படும் எனத் தெரியாத நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.


ஜனவரி 11ம் தேதிக்குள் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால், சர்வரில் ஏற்பட்ட பிரச்சினையால் நேற்று(வியாழக்கிழமை) முதல் தாக்கல் செய்ய முடியவில்லை. நாளையுடன் ரிட்டன் தாக்கல் செய்ய காலக்கெடு முடியும் நிலையில் 13ம் தேதிவரை அவகாசம் அளிக்க வேண்டும் என வர்த்தகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஜிஎஸ்டி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய நேற்றிலிருந்து ஜிஎஸ்டிஎன் முயன்று வருகிறது ஆனால், தகவல் ஏதும் இல்லை, விரைவில் கோளாறுகள் சரி செய்யப்படும் என்று மட்டும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


கடைசி நாளில் ரிட்டன் தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருந்த தொழிலதிபர்கள், வியாபாரிகள், கடைஉரிமையாளர்கள் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். பிற்பகல் 12 மணிக்கு மேல் ஜிஎஸ்டி தளம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் தாக்கல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. சர்வர் தளத்தில் கடந்த 24 மணிநேரமாக பழுது ஏற்பட்டு ரிட்டன் தாக்கல் செய்யமுடியாமல் போனதால், ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அது 'ஜிஎஸ்டி' வரி அல்ல "Give Seetharaman Tax"- வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

இதையும் படிங்க: அது 'ஜிஎஸ்டி' வரி அல்ல "Give Seetharaman Tax"- வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share