NIRF தரவரிசைப் பட்டியலை வெளியிட தடை... மதுரைகிளை அதிரடி!!
என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட உயர்நீதிமன்ற கிளைஇடைக்கால தடை விதித்தது.
தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு NIRF (National Institute of Ranking Framework ) என்பது மத்திய அரசின் கல்வித் துறை கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவில் வழங்கும் வருடாந்திர மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, அனைவரையும் உள்ளடக்குதல், என பல்வேறு அலகுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் மதிப்பிடப்படுகின்றன. ஆனால், கல்வி நிறுவனங்கள் தரும் தரவுகளை கொண்டுதான் மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் தரவுகள் சரி பார்க்கப்படும்.
முனைவர் பட்டப் படிப்புக்கான மாணவர்கள் உட்பட மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்- மாணவர் சதவீதம், முனைவர் பட்டம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, நிதி ஆதாரங்கள் மற்றும் அவற்றை செலவு செய்யும் விதம், வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம், காப்புரிமைகள், பல்கலைகழகத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்.. திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு..!
இதுமட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து படிக்கும் மாணவர்களின் சதவீதம் மாணவிகளின் சதவீதம், சமூக பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், மாற்று திறனாளி மாணவர்களுக்கான வசதிகள், கல்வியாளர்கள் மற்றும் வேலை நிறுவனங்களின் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிடும் தரவரிசை பட்டியலில், இடம்பெறும் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறந்த பல்கலைக்கழகம், கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மத்திய கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி தொடர் குறைப்பு... மதரஸா, வக்ஃபுக்கு நிதியில்லை..!