நெல்லையில் வெயிலின் கோரத்தாண்டவத்திற்கு புள்ளி வைத்த கனமழை..!
நெல்லை மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலில் நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
முன்னதாக காலை முதல் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 12:00 மணி அளவில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி உள்ளாகினர்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நீடிக்கும் சுழற்சிகள்.. கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
முன்னதாக காற்றழுத்து தாறன் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், தற்போது திடீரென கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இது ஒரு புறம் இருக்க, வெயிலின் கோரத்தாண்டவத்திற்கு நடுவில் பெய்த கன மழையால் நகரில் வெப்பநிலை நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதனால் பொதுமக்களில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களே உஷார்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!