×
 

ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.. அப்பனே விநாயகா தண்ணிய குடிச்சிட்டு அப்படியே போயிடு..!

மாங்கரை அருகே மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி விட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

கோடை காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் நீர் வற்றி வருகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இதனால், மனித வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையிலும், வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் காட்டினுள்ளே இருப்பதற்கு வழிவகை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் கோவை மாவட்டம் மாங்கரை, ஆனைகட்டி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியது. வறட்சியால் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. இதனால் பயிர் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: தும்பிக்கை துண்டாகி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை.. 2 வனகாவலர்கள் சஸ்பெண்ட்!

மேலும் வனத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று மாலை மாங்கரை அருகே உள்ள மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள்  12 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. தொடர்ந்து அந்த யானைகள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி விட்டு சென்றுள்ளது. இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டுசங்களுடைய பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share