×
 

வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிங்க.. ஆர்டர் போட்ட உயர் அதிகாரிகள்..!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்குமாறு போலீஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர், சொந்த ஊரான வரிச்சியூரைஅவரது அடையாள பெயராக கொண்டு உள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கோவையில் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்காக அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்று வரிசையில் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், வரிச்சியூர் செல்வதை கைது செய்யுமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நீட் ஒழிப்பு 'ரகசியத்தை' கண்டுபிடித்த திமுக... உதயநிதி குஷியோ குஷி..! தேர்தலுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு..!

மேலும் அவர் இதற்கு ஒத்துழைக்கவில்லை எனில் சுட்டுப்பிடிக்குமாறு போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பிடிக்க தனிப்படையினர் பொள்ளாச்சியில் முக்கிய பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வரிச்சியூர் செல்வம், தான் மதுரையில் உள்ளதாகவும், கோவை சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டதாகவும், எந்த பிரச்சனையும் இன்றி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், தன்மீது வேண்டுமென்றே பலி சுமத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பொன்முடி சொன்னது விலைமாது கதையின் பாதி... க்ளைமேக்ஸை சொல்லி திமுக-வை பொசுக்கிய ரர.க்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share