ரத்தான மின்சார ரயில்கள்.. பேருந்து நிலையங்களில் அலை மோதிய பொதுமக்கள்.. திணறிய போலீஸ்!
பராமரிப்பு பணியின் காரணமாக மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளி கல்லூரி செல்வோர் வேலைக்கு செல்வோர் என பெரும்பாலானோரின் போக்குவரத்திற்கு பெரும் உதவியாக இருப்பது மின்சார ரயில்கள் மட்டுமே. பெரும் உறுதுணையாக இருக்கும் மின்சார ரயில்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இதனை அடுத்து சென்னை எழும்பூர் கடற்கரை இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக அந்த வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செயல்படுவதாக தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று முழுவதும் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பராமரிப்பு பணியின் காரணமாக மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் 16 ரயில்கள் ரத்து..
அதேபோல செங்கல்பட்டில் காஞ்சிபுரம் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கோடம்பாக்கம் அடைய 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் திரண்டதால் தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசனை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பயணிகளின் பாதுகாப்பு கருதி காவலர்கள் சிலர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடார்கள் ஓட்டு வேணுமா? நாவை அடக்கிப் பேசு... ராஜேந்திர பாலாஜிக்கு பகிரங்க எச்சரிக்கை...!