காதல் ஜோடிகளின் பெயரைக் பொறிக்கும் ஆட்டோகிராப் செடி..! விதவிதமாய் காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று காதலர் தினமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று காதலர் தினமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதல் திருநாளில், "காதல் ஜோடி"கள் தங்கள் பெயர்களை பொறித்து வைப்பதற்காக "ஆட்டோகிராப்" என்ற பெயரில் அழகிய தாவரம் ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக, பொழுதுபோக்காக சுற்றுலா செல்லும் இடங்களில் காதல் ஜோடிகள் அங்கு இருக்கும் புராதனமான இடங்களிலும், பூங்காக்களில் உள்ள மரங்களிலும் தங்கள் பெயர்களை பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே தங்கள் நினைவாக பெயர்களை பதிவு செய்து வைக்க,செடி ஒன்றும் உள்ளது. அதை 'வேலண்டைன் ட்ரீ' என்றும் 'ஆட்டோகிராப் செடி' என்று அழைக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்
"காதலர்கள் செடி"யாக இப்போது உலகம் முழுவதும் இது பெயர் பெற்று வருகிறது. இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளூசியா ரோஸியா பிரின்சஸ்’ என்பதாகும். அதிக வெப்பம் உள்ள இடத்தில் இது வளர்கிறது. இது இந்தியாவில் தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு தோட்டத்தில் காணப்படுகிறது.
இந்த செடியின் இலைகள் பச்சை நிறத்தில் விரிவாகவும் மிகவும் தடிமனாகவும் உள்ளன. இதில் காதலர்கள் தங்களின் பெயர்களை நகத்தால் எழுதி வைக்கின்றனர். இந்த இலை உதிரும் வரை கூட இதன் மீதான எழுத்துகள் அழியாமல் இருக்கும் என்பது இதன் தனித் தன்மையாகும். வெளிநாடுகளில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்த செடிகள் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த தாவரத்தின் பூர்வீகம் கரீபியன் தீவு மற்றும் மத்திய அமெரிக்கா.
இதையும் படிங்க: ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!