×
 

பிரயாக்ராஜ் கங்கை நதியில் கலந்துள்ள ஃபாகல் பாக்டீரியா? மனிதர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் பாயும் கங்கை,யமுனை நதியில் கலந்துள்ள ஃபாகல் பாக்டீரியா உள்பட பல கிருமிகளால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை,யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள். 
கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 54.50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரில் பாயும் கங்கை, யமுனை நதியின் தரம் குறித்து ஆய்வு செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்தது. 

அதில் “கங்கை நதியில் அளவுக்கு அதிகமான மனிதக் கழிவுகள் கலப்பதால் மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது, தண்ணீரில் இருக்க வேண்டிய பீகல் ஃகாலிபார்ம் அளவு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவுகோலின்படி 100 மில்லி தண்ணீரில் ஃபீகல் கோலிஃபார்ம்(faecal coliform )2500யூனிட்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போது அந்த அளவை மீறி சென்றுவிட்டது” எனத் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: கைதிகளையும் புனித நீராட வைக்கும் உ.பி. அரசு! கும்பமேளா நீரை 68 சிறைகளுக்கு அனுப்ப முடிவு

ஃபீகல் கோலிஃபார்ம் என்றால் என்ன?: மனிதர்கள், விலங்குகள் குடலில் இருக்கும் நுண்ணுரியரிகள்தான் ஃபீகல் கோலிஃபார்ம் பாக்டீரியா. இந்த பாக்டீரியா தண்ணீர் கலந்திருந்தால், தண்ணீர் மாசுபட்டுள்ளது அல்லது கழிவுநீர் கலந்துள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் அனைத்து வகையான கோலிஃபார்ம் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. அதிலும் சில மோசமான பாக்டீரியாக்கள் உள்ளன, இகோலி, சல்மானல்ல போன்றவை மனிதர்களுக்கு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துபவை. 100 மில்லி தண்ணீரில் 2500 ஃபீகல் கோலிஃபார்ம் யூனிட்கள் வரை இருக்கலாம். இதை மனிதர்களால் தாங்க முடியும். ஆனால், இந்த அளவுக்கு மீறிச் செல்லும்போது தண்ணீரில் பரவக்கூடிய நோய்கள், தொற்றுநோய்கள் உருவாகும். மனிதர்கள் குளிக்கவோ, குடிக்கவோ, வேறு எந்த செயலுக்கும் தகுதியற்றதாக மாறிவிடும்.

மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன?: பிரயாக்ராஜ் நகரில் பாயும் மாசடைந்த நீரில் மனிதர்கள் குளித்தால் அல்லது குடித்தால் என்னவிதமான பாதிப்பு ஏற்படும் என்று துவராக நகரில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் மூத்த குடலியல் நிபுணர் மருத்துவர் அருண் ஜெயின், புதுடெல்லியில் உள்ள இலான்டிஸ் மருத்துவமனையின் தோல்மருத்துவ நிபுணர் மருத்துவர் சந்திரன் ஜெயின் குப்தா எச்சரித்துள்ளனர். பிரயாக்ராஜ் நகரில் பாயும் மாசுகலந்த நீரை குடித்தால் அதில் உள்ள இகோலை, சல்மோனல்லா பாக்டீரியா மூலம் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு, வயிறு உபாதைகள் ஏற்படும்.

மாசடைந்த இந்த நீரில் குளிப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள், கண் தொடர்பான நோய் ஏற்படலாம். உடலில் பூஞ்சை தொடர்பான நோய்களும் ஏற்படும். இந்த நீரைக் குளிக்கும்போது தெரிந்தோ தெரியாமலோ குடித்தால், மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நீண்டநாள் உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். நுரையீரல் தொடர்பான நோய்களும் இந்த நீரால் மனிதர்களுக்கு ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் மனிதர்கள் இந்த நீரை குடித்தால், நுரையீரலில் இந்த பாக்டீரியா, கிருமிகள் சென்று நுரையீரல் தொடர்பான சிக்கல்களைகளை, பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவ்வாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share