×
 

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்ன?

தென் மாவட்டங்களில் வருகின்ற 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடலோரப் பகுதிகளில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்தது. இதனை அடுத்து தமிழகத்தில் 11ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் காலை வேலைகளில் பொதுவாக லேசான பணிமோட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பத்தாம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதே சமயத்தில் உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

அதன் தொடர்ச்சியாக பதினோராம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக தென் தமிழகங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையானது அடுத்தடுத்த இரு நாட்களுக்கு நீடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேலைகளில் லேசானது முதல் மிதமான பணிமோட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share