×
 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தை ஓட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்த வருகின்றது. தமிழகத்தில் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை படிப்படியாக வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று செல்சியஸ் டிகிரி அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரங்களில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இயல்பை விட அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை ஆய்வு மையம் எடுத்த எச்சரிக்கை!

இதையும் படிங்க: வங்கக்கடலில் நீடிக்கும் சுழற்சிகள்.. கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share