திடீரென வழிந்த ரத்தம்... துடிதுடித்த மாணவி... அரசு பள்ளி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்...!
பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் விவசாயி. இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள்
கவிபாலா (11). இவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது. உடனே மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்த மாணவி கவிபாலாவை பார்த்த அதிர்ச்சியில் அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் புக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் தியா (14), ஆண்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகள் சகாயமேரி (15) ஆகிய இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர்.
உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் பள்ளத்தூர் அருகில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்த மாணவி கவிபாலாவை உடனே மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர்கள் மாணவி கவிபாலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்த மாணவி கவிபாலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி கவிர்பாலாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தற்போது மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகியநாயகியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் இருந்துவரும் மாணவிகள் தியா மற்றும் சகாயமேரியை பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் நேரில் சந்தித்து மாணவிகளுக்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: மாப்பு..! வெச்சிட்டாண்டா ஆப்பு..! பஞ்சாபிலும் கலகலக்கும் ஆம் ஆத்மி கட்சி
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த எம்.எல்.ஏ அசோக்குமார் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். இன்று பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் கவிபாலா என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடியாருடன் மோதல்… செங்கோட்டையனுக்கு செம டிமாண்ட்: திமுக- தவெக இடையே கடும்போட்டி..!