காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. காட்டுக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஆக்ஷனில் இறங்கிய இந்திய ராணுவம்..!
ஜம்மூ காஷ்மீரின் புஞ்ச் மாவட்டத்தில் உள்ள காடுகளில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவத்தினர் களமிறங்கி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாக்காட்த திடீரென ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். திடீரென நள்ளிரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தாலும், எதிராபராமல் நடந்த இந்த தாக்குதலை ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். ராணுவத்தின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள், லசானாவில் உள்ள மலைப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனத்திற்குள் ஓடிச் சென்று பதுங்கினர்.
பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை உறுதி செய்த ராணுவம், அங்கு தேடுதல் வேட்டையில் களம் இறங்கியது. ராணுவத்தின் ரோமியோ படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் இணைந்து பயங்கவராதிகளை தேடும் பணியில் முழு மூச்சாய் ஈடுபட்டு உள்ளனர். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்துவது தொடர்து வருகிறது.
இதையும் படிங்க: உங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகள் மீது கவனம் செலுத்துங்கள்.. வங்கதேசத்தை விளாசிய இந்தியா..!
பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதி அடர்ந்த வனம் என்பதால், தேடுதல் வேட்டையில் சவால்கள் நிறைந்திருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. எனினும், ராணுவத்தின் ரோமியோ படை பிரிவினர், மலைக்குன்றுகள், பாறை இடுக்குகள், அடர்ந்த வனம் என அனைத்து இடங்களிலும் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர். பகல், இரவு பாரமல் தேடுதல் வேட்டை நடக்கிறது.
இதற்கிடையே ரஜோரியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரை மர்ம நபர் தாக்கியதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. ராணுவ வீரர் மீது தாக்கிய நபர் யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக புதிய வகை பயங்கரவாத அலையை எதிர்த்து போராடி வருவதாக போலீஸ் ஐஜி துதி கூறினார். பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவியதும், அங்கு ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலும் காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!