காலையிலேயே அதிர்ச்சி; ரயிலைக் கவிழ்க்க சதியா? - தண்டவாளத்தில் நடந்த பயங்கரம்!
திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாழத்தில் போல்ட் நட் கழற்றப்பட்டிருந்ததை அடுத்து ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த திருவலங்காடு ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக வரக்கூடிய மார்கத்தில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட் நெட்டுகளை கழட்டப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டான்ர். அதேபோல ரயில் தண்டவாளங்களை மாற்றும் சிக்னலை கொடுக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்த ரயில்வே போலீசார், ஜான்சி என்ற மோப்ப நாய் உதவியுடன் தண்டவாளம் முழுவதையும் சோதனை செய்தனர்.
இதேபோன்று கடந்தாண்டு பொன்னேரி ரயில் நிலையம் அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை-கவரைப்பேட்டை மார்க்கத்தில் சென்ற விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோது விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: கூகுள் மேப் பார்த்து காரை தண்டவாளத்தில் விட்ட சம்பவம்.. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்..!
இதையும் படிங்க: உங்ககிட்ட இந்த ரயில் டிக்கெட் இருக்கா? நீங்கள் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த டிரிக்ஸ் தெரியுமா?