×
 

விலைமாது வீட்டில் படுத்துக்கிட்டா..? நின்னுக்கிட்டா..? ஸ்டாலினின் தூக்கம் கெடுத்த பொன்முடியின் பதவிக்கு ஆபத்து..?

அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.  

பொதுமேடையில் பெண்கள் மத்தியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ''காமச்சுவையை பரப்புவதில், இங்கே மகளிர் எல்லாம் கொஞ்சப்பேர் இருக்குறாங்க. ஆனால் மகளிருக்கே நிறைய பேருக்கு டிக்கெட் கொடுத்தவர் ராமகிருஷ்ணன்.அதில் ஒரு இடத்தில் சொல்லுவோம். (பலமாக சிரித்துக் கொண்டே...) தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது.

நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.

இதையும் படிங்க: விலைமாது வீட்டில் படுத்துக்கிட்டா? நின்னுக்கிட்டா..? இவ்வளவு ஆபாச பேச்சா பொன்முடி..?

அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.  அவரது பேச்சு கடும் விவாதங்களை கிளப்பி உள்ளது.

இந்த அளவிற்கு கேவலமான ஆபாச பேச்சை பேசும் பொன்முடி அமைச்சர் பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் . இவரை நீக்கவில்லை என்றால், முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கே தகுதியில்லாதவராகிறார் pic.twitter.com/sXNNLBycWX

— Dolphin Sritharan (@DolphinSrithar) April 10, 2025

 

இதற்கு சைவ சித்தாந்தக் கழகம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. ''இந்து மதத்தை இழிவு செய்வது திமுகவிற்குப் புதிதல்ல. அவர்களின் தலைவரான ஈவெரா, ஆரம்பக் காலத்தில் அனைத்து மதங்களையும் விமர்சித்தாலும் மிகச் சில ஆண்டுகளிலேயே அவர் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கத் தொடங்கினார் என்பதும் அதையே தாம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார் என்பதும் வரலாறு. 

திமுக அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமயத்தார்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தும் விதமாக அநாகரிக முறையில் பேசியுள்ளார். அதே வழியில் தான் திமுகவும் பயணிக்கிறது. இன்று இந்துத்துவம் மத்தியில் கோலோச்சி வரும் நிலையிலும், நாடெங்கிலும் இந்துத்துவத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையிலும் திமுகவினரால் மட்டுமே இந்து மதத்தை குறிப்பாக சைவ சமயத்தையும் வைணவ -சமயத்தையும் இழிவாகப் பேச முடியும். இதே போல் மற்ற மதங்களை இவர்களை இழிவுபடுத்தி பேசுவார்களா?

 

சைவ, வைணவ மக்களின் நம்பிக்கையை மிகவும் அநாகரிக முறையில் கொச்சைபடுத்தி பேசிய நபர்கள் அமைச்சராக இருப்பதற்கு தகுதியானவர்களா? அமைச்சர் பொன்முடியின் இத்தகைய இழிவான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''அமைச்சராக இருப்பதற்கு  துளியும்  தகுதி இல்லாத நபர் தான் இந்த பொன்முடி. மேடையில் இவ்வளவு ஆபாச நிறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி திமுககாரரால்தான் பேச முடியும் என்பதை இந்த பொன்முடி மீண்டும் நிருபித்துள்ளார். பெண்ணியம் பேசும் சகோதரி கனிமொழி, பொன்முடியின் இந்த ஆபாச பேச்சை கண்டிப்பாரா? ஈ.வெ.ராவின் வழியில் வழுவாது நடப்பவர் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி. அவர் வழியில் வண்டைத் தமிழில் பேசுகிறார். திருவள்ளுவர் அவையடக்கம்  என்றொரு அதிகாரம் 10 குறள்கள் அருளி இருக்கிறார்.அவையை அசிங்கப்படுத்துவதில் ஈவெரா முதல் பொன்முடி வரை கடும் போட்டி!இராமசாமி கும்பலின் மேடை, ஆபாச மேடை தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஓசி புகழ் பொன்முடி!

பொன்முடி எல்லாம் ஒரு வாத்தியாரா இருந்ததை நினைத்தாலே கஷ்டம். இந்த ஆள் மந்திரி வேறு. தமிழகம் தகுதி அவர்கள் தேர்ந்து எடுப்பவர்களை பார்த்தாலே தெரிகிறது. இப்படியே போனா தமிழன் என்றால் பல நாடுகள் விசா கூட தராது. நான் சும்மா சொல்லவில்லை. அரசியல் நாகரிகத்தின் மோசமான முகம் அமைச்சர் பொன்முடி!

பொது மேடையில் பேச வேண்டியது அரசியல் நாகரிகம்… ஆனா இவன் பேசுவது ஆபாசம், அவமதிப்பு, மற்றும் மானபக்குறைவு! இவரிடம் கல்வி இருக்கலாம். ஆனால் மரியாதை, பண்பாடு, தமிழ் நாகரிகம் இல்ல. கலைஞர் காலத்திலிருந்தே இவர்கள் கற்றது... பாரம்பரியத்தை அவமதிக்க, சமய நம்பிக்கையை சிரிக்க, நாகரிகத்துக்கு கீழே பேச..'' என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை விடாமல் விரட்டிய இளைஞர்கள்... துரத்தி துரத்தி வாக்குவாதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share