தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமா? - அமைச்சர் மா.சு. விளக்கம்!
தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
2019 இறுதியில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதுமே அதனுடைய பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள் பற்றி உலக சுகாதார மையம் எச்சரித்தது. கொரோனா தொற்று 3 ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே உலுக்கி எடுத்தது. அதேபோல் குரங்கு அம்மை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பல்வேறு பன்னாட்டு விமான நிலையங்களை நாங்கள் நேரடியாகவே போய் ஆய்வு செய்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து தனி அறைகள் ஏற்பாடு செய்து ஒரு மருத்துவ டீமையும் அங்கே மருத்துவ குழுவையும் அங்கே அமைத்து அதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டோம். ஆனால் தமிழ்நாட்டில் யாருக்கும் மங்கி பாக்ஸ் பரவவில்லை.
இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்
தற்போது எச்எம்பிவி வைரஸ் தொற்று குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸ் குறித்து எந்த ஒரு அவசர கால நிலையையும் உலக சுகாதார மையம் அறிவிக்கவில்லை. இதுவரை WHO சார்பில் என்னென்ன வகைகளில் இதை கண்காணிக்க வேண்டும், என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வரவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த புதிய வைரஸால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இது ஒன்றும் புதிய வைரஸ் கிடையாது 50 ஆண்டுகளுக்கு முன்னாலே எச்எம்பிவி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றலாம். காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதை உள்ளவர்கள் யார் போய் மருத்துவமனைகளுக்கு அல்லது ஆய்வகங்களுக்கு போய் பரிசோதனை செய்து கொண்டால் ஒரு பத்து 20 பேரில் யாருக்காவது இந்த மாதிரியான வைரஸின் தாக்கம் இருக்கக்கூடும், அப்படி இருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே சரியாகக்கூடியதாகவே உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி முதல்வர் இல்ல புதுப்பிப்பு முறைகேடு; "ரூ.40 கோடி ஊழல்; கெஜ்ரிவாலின் 'கருப்பு பக்கங்கள்' அம்பலம்"என பாஜக கடும் தாக்கு...