×
 

போர் நிறுத்தம் தோல்வி: காசாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேல்- 130 பேர் பலி..!

மீட்புப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ்கள் மக்களைக் காப்பாற்றுவதில் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 15 மாதங்களாக நீடித்த போரில் ஒரு மாத அமைதிக்குப் பிறகு, இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.  இஸ்ரேலிய இராணுவம் திடீரென காசாவில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

"நாங்கள் தூங்கிக் கொண்டு இருந்தோம், திடீரென்று பெரிய வெடிச்சத்தங்களைக் கேட்டு விழித்தோம். இரவு வெகுநேரமாகி விட்டதால், தாக்குதல்கள் எங்கு நடந்தன என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை" என்று கத்தார் செய்தி நிறுவனமான அல்-ஜசீராவின் நிருபர் கூறினார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கி உள்ளன. உக்ரைன் மற்றும் காசா போரை நிறுத்துவது டிரம்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஆனால், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை டிரம்ப் மத்திய கிழக்கில் அமைதியைப் பற்றி தீவிரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

இதையும் படிங்க: 'வா காளை, என்னைக் கொல்லு..!' இந்திய எல்லைக்கு வந்த ஹமாஸ்..!

காசாவில் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 131 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ''நாங்கள் இருக்கும் மையப் பகுதியில், பல ட்ரோன்கள், போர் விமானங்கள் வானத்தில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிடுவதைக் காண முடிந்தது. இது பாலஸ்தீனியர்களிடையே மிகுந்த அச்சத்தின் சூழலை உருவாக்கி உள்ளது'' என்றும் அந்த நிருபர் கூறினார். ஏனென்றால் அவர் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளைக் காண ஆவலுடன் காத்திருந்தார்.

காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஐ.டி.எஃப் மற்றும் ஷின் பெட் விரிவான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததை அடுத்து, காசாவில் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜனவரி 19 அன்று இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்து இருந்தார். ஆறு வாரங்கள் நீடித்த முதல் கட்டத்திற்குப் பிறகு தொடங்க இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்கள் மறுத்துவிட்டதால், இஸ்ரேலும், ஹமாஸும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குகின்றன.

அரை மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் 35க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக நிருபர் அனஸ் அல் ஷெரிப் தனது  எக்ஸ்தளத்தில் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ்கள் மக்களைக் காப்பாற்றுவதில் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: காசா-ஹமாஸில் இஸ்ரேல் மீண்டும் போர்: மனதை உலுக்கிய அந்த நிகழ்வு- டிரம்பின் திடீர் மாற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share