×
 

கார் ரேஸில் 3வது இடம்தான்... ஆனாலும் அஜித் அணி கொண்டாடப்படுவது ஏன்..?

கிரிக்கெட்டில் எப்படி  6 பந்துக்கு 18 ரன் அடிக்கணும் என்கிற மாதிரி சிச்சுவேஷனில் ஜெயிக்கிறோமோ அதே மாதிரி தான்  அஜித் அணி வெற்றிபெற்றதும்.

அஜித் கலந்து கொண்டது 24 மணி நேரப் பந்தயம். உடற்திறனுக்கு எப்படி இரும்பு மனிதன் போட்டிகளோ, அது போல கார்களுக்கான ஒரு என்ட்யூரன்ஸ் வகையறா இப்பந்தயம்.  இதில் வேகமாகச் செல்வது ஒரு விஷயமே அல்ல, அது கடந்து ஒரு காருக்கும் மனிதனுக்கும் நிகழும் அற்புதமான ஒரு புரிந்துணர்வு அதி முக்கியம், 24 மணிநேரம் இரவு, பகல், மழை என பார்க்காமல் ஓட்ட வேண்டும். துபாய் பாலைவன வானிலை ஒரு அதிசயம், பகலில் வெயில் சுட்டெரிக்கும், இரவில் குளிரும். என்ன ஆனாலும் ஓட்டியே ஆக வேண்டும்.

மொத்த 24 மணி நேரத்தில் 2500 முதல் 3500 கி.மீ வரை்ஒரு கார் கடக்கும். பந்தயத்தின் இடையே கார் மாற்றம் செய்யக்கூடாது. ஆனால் பழுது பார்க்கலாம். கிட்டத்தட்ட ஆறு கி.மீ தொலைவுள்ள சர்க்யூட்டை 24 மணி நேரமும் நூற்றுக் கணக்கான முறை சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு 200 கி.மீக்கு டயர் மாற்றம் நிகழும். இதில் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை. 

இரண்டு அல்லது மூன்று ஓட்டுநர்கள் துளி தவறிழைக்காமல் குழுவாக செயல்பட வேண்டும். கார்ப் பந்தயங்களில் மிகக் கடினமான வகை இது. காரணம் உடல்திறன், மனவலிமை, கார் நுணுக்கம், குழுவாக செயல்படுதல் என இது பந்தயங்களின் தலைவன். அதில் தல கலந்து கொள்வது கனவை நோக்கி உழைத்திருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு பெரும் உத்வேகம் தான். 

இதையும் படிங்க: துபாய் கார் ரேஸில் கலந்து கொள்ளப் போவதில்லை - அஜீத் திடீர் அறிவிப்பு....

வலிமை என்பது ஒரு சொல் மட்டுமல்ல, அஜித் இன்று அதை செயலாக்கியிருக்கிறார். இங்கே சில  பேர்  மூன்றாவது இடத்துக்கு எதுக்கு இவ்வளவு சந்தோசம் எனக் கேட்கிறார்கள்.

 அஜித் நாலாவது இடம் வந்து இருந்தாலும் இல்லை 19  இடம் வந்திருந்தாலும் இது பெரிய அச்சீவ்மெண்ட்தான். இந்த ரேஸில் கடைசி ஒரு மணி நேரம்  படத்தில்கூட இவ்வளவு திரில்லிங் இருந்து இருக்காது. ஒரு நிமிஷம் 30 செகண்ட்  மூன்றாவது இடத்தில் இருந்த அணி (#974)  லீடிங் போய்க்கொண்டு இருந்தார்கள். இரண்டாவது இடத்துக்கு  9 நிமிஷம் முன்னாடி போகணும்  அவ்வளவு ஈஸியா போயிட முடியுமா எனக் கேட்டால் முடியாது

 ஒவ்வொரு செகண்டும் முக்கியம். இதில் மூன்றாவதக இருந்தால் அணி  Pitstop போவார்கள்  அப்போது ஒரு ஒரு நிமிஷம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறபோது  Code 60  (max speed 60kmph and no overtaking) ஆக்டிவேட் செய்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் Pitstop ல் பெட்ரோல் நிரப்பினார்கள்.அதே நேரத்தில் அஜித் அணிக்கு  10 செகண்ட் தான் எக்ஸ்ட்ரா கிடைத்தது.  இன்னும் ஒரு பத்து செகண்ட்  பெனால்டி இருக்கறதுனால ஒரு நிமிஷம் 10 செகண்ட் முன்னோக்கி வரணும்...

கோட் 60  எடுத்த உடனே  நம்ம டிரைவர்  ஒரு 30 செகண்ட்ஸ் எளிதா கடந்துவிட்டார்  என்ன ரீசன் என்றால்  நம்பர் 974  ட்ராக்குக்குள் சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது மீண்டும் ஸ்டார்டிங் பாயிண்ட்டில் இருந்து வருவது தான் கவுண்ட் ஆகும்...

அதுவரைக்கும் 60 KMPH தான்  ஓட்டவேண்டும்.  அந்த நேரத்தில் அந்த 30 செகண்ட்  அஜித் அணி எடுத்துக் கொண்டது.அடுத்த 5 சுற்றிலும்  மொத்தம் 12 நிமிஷத்தை குறைத்து முன்னோக்கி வந்தார்கள். கடைசி 15 நிமிடத்தில் தான் அஜித் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்தது. 

அதனால்தான் இந்த வெற்றியை அஜித் குமார் அணியும் அங்கு இருந்தவர்களும் அவ்வளவு கொண்டாடினார்கள். கிரிக்கெட்டில் எப்படி  6 பந்துக்கு 18 ரன் அடிக்கணும் என்கிற மாதிரி சிச்சுவேஷனில் ஜெயிக்கிறோமோ அதே மாதிரி தான்  அஜித் அணி வெற்றிபெற்றதும்.

இதையும் படிங்க: இது எப்படி இருக்கு..!? "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாள்தான் உண்மையான சுதந்திர தினம்" ; மோகன் பகவத் சொல்கிறார் ...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share