ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம்..
புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் - 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு
திமுக அரசின் தேர்தல்கால வாக்குறுதியான புதிய பென்சன் திட்டம் ரத்து செய்து சத்துணவு ஊழியர்கள், எம்.ஆர்.பி. செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள், , உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 41 மாத கால பணிநீக்க காலத்தை வரன்முறை படுத்த வேண்டும்,
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்க வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் மாநில மாநாட்டில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவை கண்டித்தும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அராஜகம் செய்து நிலத்தை அபகரிக்க முயலும் புரோக்கர்கள்.. குறைதீர் கூட்டத்தில் குடும்பத்துடன் மனு அளித்த மூதாட்டி..
இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வருவாய்த் துறை அலுவலர்கள் வருவாய்த்துறை பணியாளர்கள் சத்துணவு ஊழியர்கள் செவிலியர்கள் நெடுஞ்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த, செயல்படாத அமைப்பு.. கொந்தளிக்கும் கபில் சிபல்.. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு.!!