காஷ்மீர் பற்றிய பாக். நிலைப்பாட்டை ஏற்கவே முடியாது! இந்தியா திட்டவட்டம்..!
காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஏற்கவே முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கு இடையேயான ஓர் அமைப்பு தன ஐக்கிய நாடுகள் சபை.
உலக நாடுகளின் நிகழும் பிரச்சனைகளை கூட பேசி தீர்வு காண ஐநா சபை பல அறிவுரைகளை வழங்கும். இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில், அவ்வப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், மற்றவர்களுக்கு பாடம் எடுக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை என இந்தியா கூறி இருந்தது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், அவை தொடர்ந்து இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகவே இருக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் இதற்கு சான்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐ.நா.சபை தலைவர் கருத்துக்கு இந்தியா பதிலடி...!
மேலும், பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்ட நிலையில், இந்தியாவுக்கு எதிரான பொய் பரப்புரைகளை பரப்புவதற்கு சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் இந்தியா ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தது.
இந்த நிலையில், ஐ.நா.சபையில் ஜம்மு காஷ்மீர் குறித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி கொடுககும் வகையில் இந்தியாவிற்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசி இருந்தார்.
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒங்கிணைந்த பகுதியாக இருந்து வருவதாகவும், உலகளாவிய மத பாகுபாட்டை இந்தியா எதிர்த்து போராடுவதாகவும், காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.
அவர்கள் வழக்கம் போலவே காஷ்மீர் குறித்து பேச தொடங்கி உள்ளதாக கூறிய அவர், காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் நியாயமற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும்., இந்த யதார்த்தத்தை யாராலும் மாற்ற முடியாது என கூறினார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது..! பாகிஸ்தான் இந்தியா கடும் தாக்கு….