×
 

மெகாபூகம்பம் வரலாம்.. சுனாமியால் 3 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: ஜப்பான் அரசு புதிய எச்சரிக்கை..!

ஜப்பானில் ஏற்படும் மெகாபூகம்பத்தால் ஏறக்குறைய 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழக்கலாம் என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

ஜப்பானில் பசிபிக் கடற்பகுதியில் ஏற்படும் மெகாபூகம்பத்தால் தங்கள் நாடு மிகப்பெரிய ஆபத்தையும் பேரழிவையும் சந்திக்கும். இந்த மெகாபூகம்பத்தால் பேரழிவுகளை உருவாக்கும் சுனாமி வரக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடித்து தரமட்டமாகலாம், ஏறக்குறைய 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழக்கலாம் என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு, இதேபோன்று மெகாபூகம்பம் குறித்த எச்சரிக்கையை ஜப்பான் அரசு வெளியிட்டு, இந்த பூகம்பம் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 9 வரை இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜப்பானில் ஏற்படப்போகும் 9 ரிக்டர் நிலநடுக்கம்: 3 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்..!

ஜப்பான் அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இந்த அறிக்கையை ஆய்வு செய்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “இப்படிப்பட்ட மெகாபூகம்பம் ஜப்பானைத் தாக்கினால், அந்நாட்டுக்கு 1.81 லட்சம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும். இது 270 லட்சம் ஜப்பான் கரன்சியான யென்னுக்குச் சமம்.நாட்டின் ஒட்டுமொத்தஉள்நாட்டு உற்பத்தியில் பாதியை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த மெகாபூகம்பத்தால் ஜப்பான் மக்கள் 12.30 லட்சம் பேர் இடம் விட்டு வேறு நகரங்களுக்கோ அல்லது புலம்பெயர்ந்தோ செல்லும் அபாயம் ஏற்படும் அதாவது ஜப்பான் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடம்மாறலாம். இந்த மெகாபூகம்பம் பெரும் குளிர்காலத்தி்ன் பின்இரவில் ஏற்படலாம். இந்த பூகம்பம் ஏற்பட்டபின் வரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் சுனாமியாலும், கட்டிடங்கள் இடிபாடுகளாலும் மட்டும் 2.98 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமாக நிலஅதிர்வு ஏற்படும் நாடுகளிலும், பகுதிகளிலும் ஜப்பான் ஒன்றாக இருக்கிறது. ஜப்பான் அரசைப் பொருத்தவரை ரிக்டர் அளவில் 8 முதல் 9 அளவு வரை மெகா பூகம்பம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. 

ஜப்பானின் தென்மேற்கு பசிபிக் கடலிலில் இருந்து 600 கி.மீ தொலைவில்தான் இந்தோனேசியாவில் கடலுக்கடியில் இருக்கும் தட்டுகள் உள்ளன.இந்த கடல்தட்டுகள் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகரும்போதுதான் மெகாபூகம்பம் ஏற்படும்.

ஜப்பானில் 2011ம் ஆண்டில் 9 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, சுனாமியை ஏற்படுத்தியது. இந்த பூகம்பத்தில் சிக்கி ஜப்பானின் வடபகுதி மாநிலங்களில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர், அணுஉலையில் இருந்த மூன்றடுக்கு பாதுகாப்பில் ரியாக்டரும் உருகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 மணி நேரத்தில் அடித்து தூள் கிளப்ப தயாராகும் ஜப்பான்... நாளை நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share