×
 

வித்தியாசம் தெரியாத பாதரசம் - விஜயை வெளுத்து வாங்கிய கருணாஸ்...!

பாசிசத்துக்கும், பாதரசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என விஜயை கருணாஸ் வெளுத்து வாங்கியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்குளத்தூர் புலிப்படையின் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இன்றைக்கு எந்த ரூபத்திலும் மத்திய பாசிச அரசு செயல்படுத்த துடிக்கின்ற எந்த ஒரு தீங்கான செயல்பாட்டுகளையும் செயல் திட்டங்களையும் ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்கின்ற உறுதிக் கொள்கை உடன் இருமொழிக் கொள்கையை மட்டும்தான் என திமுக உறுதியேற்றிருக்கிறது.  5000 கோடி அல்ல, 10000 கோடி தந்தாலும் தமிழகத்திலே இருமொழிக் கொள்கை மட்டும்தான் செயல்படுத்துவோம் என்பதிலே உறுதியாக இருக்கின்ற ஒப்பற்ற தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் நீடூடி வாழ வேண்டும் என்றார். 

 அரசியல் என்பது எல்லோருக்குமானது பொதுவானது. ஆனால் இன்றைக்கு நாடு இருக்கக்கூடிய ஒரு நாசமான சூழலில் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு ஆரிய கூட்டம், ஆர்எஸ்எஸ் கூட்டம்  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு என்கின்ற ஜனநாயகத்துக்கு புறம்பான இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு செயல்பாட்டை தமிழகத்திலே புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

 இன்றைக்கு புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கக்கூடிய இருக்கக்கூடிய ஒருவர் பாசிசத்திற்கான புரிதலும் இல்லாமல் பாயாசம் என்கின்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் யாராக இருப்பார்கள் ஒரு பாதரசம் தான் அப்படி பேசும். பாதரசம் என்னவென்றால் உங்களுக்கு தெரியும் அது எந்த ஒரு உலோகத்தோடும் ஒட்டாது அப்படி எந்த உலோகத்தின் கூடும் ஒட்டாத ஒன்று மக்களோடும் ஒட்டாது என்பது என்னுடைய கருத்து. இது முழுக்க முழுக்க பாசிசத்தினுடைய சித்தாந்தமாக பாசிசத்தினுடைய அடுத்த வடிவமாகத்தான் இந்த பாயாசத்தை மத்திய அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ”வாட் ப்ரோ, ஒய் ப்ரோ” என விஜய்யை கிண்டலடித்த சரத்குமார்!!

 விஜயை பாஜக அரசு தான் இயக்குதுன்னு சொல்றீங்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை நீங்க போக போக புரிஞ்சுக்குவீங்க எனக்கூறிய கருணாஸ், நான் அந்த அர்த்தத்துல தான் சொல்றேன் என்றார். இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த நிலையில மொழி பிரச்சனை பள்ளி பிள்ளைகளுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கக்கூடிய இந்த தருணத்துல, இன்றைக்கு ஒட்டுமொத்தமாக அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினருடைய எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

 

தமிழக மக்களால் தமிழர்களால் உருவாக்கப்பட்ட நடிகர் விஜய், தமிழ் மக்களுக்கு ஒரு துரோகத்தை மத்திய அரசு உருவாக்க நினைக்கிறது என்கின்ற பொழுது அதை தட்டிக் கேட்க வேண்டிய முதல் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. சமாளிக்க முடியாமல் தான் திமுக அரசு நடிகையை வைத்து  வழக்கு தொடுக்குதுன்னு சீமான் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசுக்கும், இதுக்கெல்லாம் எந்த சம்பந்தமும் இருக்காது எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ‘டேய் என்னங்கடா’... தவெக தலைவர் விஜயை ஒருமையில் சாடிய சரத்குமார் - ஏன் தெரியுமா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share