×
 

விபரீதத்தில் முடிந்த ட்ரீட்மென்ட்..! நாக்கை துளைத்த டாக்டர் மீது போலீசில் புகார்..!

கேரளாவில் பல்வரிசை சீரமைப்பு சிகிச்சையின் போது மக்கள் காயம் ஏற்படுத்தியதாக கூறி பெண் ஒருவர் பல் மருத்துவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

பற்கள் வரிசையில் நெரிசல், இடைவெளி அல்லது தவறான நிலையில் இருந்தால், அவற்றை சீராக வரிசைப்படுத்தி, நேராக்குவதே பல்வரிசை சீரமைப்பு சிகிச்சை. பல் பிரேஸ்கள், பல் கிளிப்கள், மறுசீரமைப்பு பல் மருத்துவம் என 3 வகைகளில் பள்வரிசை சீரமைப்பு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பற்களை சீரமைத்துக் கொள்ள முடியும். 

இதனிடையே, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் சீரற்ற பல்வரிசை காரணமாக அதனை சரி செய்ய பல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரது பற்களை பரிசோதித்த மருத்துவர் பல்வரிசையை சீரமைக்க பற்களில் துளையிட்டு கம்பி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு..!

அதனை ஒப்புக்கொண்ட பெண்ணின் பற்களில் மருத்துவர் துளையிட்டுள்ளார். அப்போது துளையிடுவதை மருத்துவர் செய்த சிறு தவறு காரணமாக அந்தப் பெண்ணின் நாக்கில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் மருத்துவரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்த நிலையில் தனியார் பல் மருத்துவமனை மீதும் சிகிச்சையில் தவறு செய்த மருத்துவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 125ஏ கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறிய போது, பல் சிகிச்சையின் போது தவறாக துளையிட்டதால் நாக்கின் இடது பக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு காயம் ஏற்பட்டதாகவும், வலி இருப்பதாக கூறியபோது பல் மருத்துவர் வலி நிவாரணி மருந்தை பரிந்துரைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் வலி தாங்க முடியாததால் பாலக்காடு மாவட்டம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்ததாக அவர் கூறினார்.

இதுபோல வேறு எந்த நோயாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், பல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட மருத்துவ அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: கேரள மாநில பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. வேட்புமனுத் தாக்கல் செய்தார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share