×
 

2025ல் திடீர் திருப்பம்... 75 வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு திரும்புகிறாரா மோடி..? பேரலையாய் பிரவாகம் எடுக்கும் அரசியல்..!

மோடி தனது தனது 75வது வயதில் பாஜகவின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-க்கு திரும்புவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பின்னடைவைச் சந்தித்தது பாஜக. ஆனாலும் கூட்டணிக் கட்சிகள் தயவுடன் ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் மீண்டு வந்ததைப் பார்க்கும்போது, ​2025ம் ஆண்டிலும் அரசியலில் பாஜக முன்னேறிச் செல்ல தீவிரம் காட்டும் வாய்ப்புள்ளது. வரும் ஆண்டிலும் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை திக்குமுக்காடச் சேயும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

புத்தாண்டை அடுத்து, டெல்லி, பீகார் ஆகிய இரண்டு முக்கிய சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக தனித்தே டெல்லியில் போட்டியிடுகிறது. டெல்லியில் இருந்து 27 ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவர பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தனது வெற்றியை தெளிவாக பதிவு செய்தால், அது பாஜகவுக்கு பாதகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. 
மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வென்றன. இப்போது 2025ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் இருவரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். பீகாரிலும் 2025ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசி வருகின்றனர். அதே நேரத்தில், லாலுவின் வழிகாட்டுதலின் கீழ் தேஜஸ்வி யாதவும் தனித்து ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சி செய்வார்.

இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!

எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் கூட்டணி கட்சியாகவே இருக்கிறது.

மும்பையில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மும்பை ஆசியாவிலேயே பணக்கார நகரம். மகாயுதிக்கும், மகாவிகாஸ் அகாதி கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நடக்கும். இங்கு சிவசேனா (உத்தவ்), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே போட்டி இருந்தாலும், இந்த முறை தேர்தலில் பாஜகவும் முக்கிய பங்கு வகிப்பதை தவிர்க்க முடியாது. 

மும்பையில் பாஜக தனது வேர்களை பலப்படுத்தியுள்ளது. மும்பை மாநகரை 1985 முதல் (1992-1996 தவிர) சிவசேனாவால் ஆளப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது சிவசேனா இரண்டு துண்டுகளாக கூறுபடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு காங்கிரஸ் தனது இருப்பை வலுப்படுத்த வேண்டும் என நினைக்கிறது. காங்கிரஸுக்கு நாட்டின் பிரச்னைகளை மையப்படுத்தி களத்தில் நின்று போராடி தம்மை வலுப்படுத்த நினைக்கிறது. அதே வேளையில், தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்து காப்பாற்றுவது காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருக்கும். 

இண்டியா கூட்டணியில் மம்தா பானர்ஜி தலைமையை கேட்டு வருவதும்  விவாதிக்கப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜியை எல்லாம் பாஜக சட்டை செய்யவே இல்லை. அவர்களின் இலக்கு ராகுல் காந்தியும், இந்திரா காந்தியின் குடும்பமும்தான். வரும் ஆண்டில் அதை முறியடிக்கும் சவாலை காங்கிரஸ் சந்திக்கும்.

2025ல், விஜயதசமி நாளில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்குள் நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த  அந்த சங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த சங்கம் பிறகு பல பெரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும். அதன் தாக்கம் அரசியல் சூழ்நிலையிலும் வெளிப்படும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகப் போகிறது. அதனால் அவர் ஓய்வு பெறுகிறாரா? என்கிற கேள்விகள்  எதிர்க்கட்சிகளிடம் இருந்து எழலாம். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘மோடி தனது தனது 75வது வயதில் பாஜகவின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-க்கு திரும்புவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும், பாஜக அரசியலமைப்பில் 75 வயதில் ஓய்வு பெறுவது பற்றி எந்த விதியும் இல்லை. இந்தப் புத்தாண்டில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் வருவார். பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. 

மக்களவை தேர்தலின் போது,  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே விரிசல் நடப்பதாக விவாதம் எழுந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  தலைவர் மோகன் பகவத்தின் பல செயல்பாடுகளும், பேச்சுகளும் அதை உறுதி செய்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ரகசிய ஆய்வில் பல மாநிலங்களில் பாஜக கணிசமாக பலவீனமடைந்திருப்பதை ஆர்.எஸ்.எஸ் கண்டறிந்துள்ளது. 

இதையும் படிங்க: அமைச்சர் பதவி தராவிட்டால்...? மிரட்டும் முக்கியத் தலைவர்... அடித்து ஆடும் பாஜக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share