×
 

கோடநாடு வழக்கு..! ஜெ. உதவியாளருக்கு சிபிசிஐடி சம்மன்..!

கோடநாடு வழக்கு விசாரணைக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு 2022 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வருமே ஆறாம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவுடன் ஏன் கூட்டணி.? குழம்பும் நிர்வாகிகள்.. அதிமுக மா.செ. கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்.!

இவரிடம் ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share